" முற்பகல் செய்யாவிடில் நிச்சயம் பிற்பகலில் விளையாது “
நம் முன்னோர்கள்
காக்கைக்கு தினமும் சாதம்
படைத்து உணவளித்தார்கள்,
நம் முன்னோர்கள்
சிறு உயிரிகளுக்கும்
மாக்கோலமிட்டு உணவளித்தார்கள்,
நம் முன்னோர்கள்
சாலைகளில் தாகமாய் கடந்து செல்லும்
கால்நடைகளுக்காக
வீட்டு வாசலிலேயே தண்ணீர் வைத்தார்கள்
இன்று நாம் ?
இந்த கேள்வி நீண்டநாளாய் என்
மனதை உறுத்திக்கொண்டே இருந்தது….
அப்பாடா !
இன்று விடை கிடைத்துவிட்டது…..
சாலையில் வெவ்வேறு இடங்களில்
இரு காட்சிகள் …
இந்த நாட்டின் சாதாரனர்களுக்கு
அரசு அளிக்கும் ரேசன் பொருட்கள்
கொண்டும் செல்லும் வாகனம்
ஊரெங்கும் அதை சிதறிகொண்டே
செல்வதை பார்த்த போது
என் முதல்
கவலை குறைந்துவிட்டது.
இந்த நாட்டின் சாதாரனர்களுக்கு
அரசு அளிக்கும் குடிதண்ணீர் வாகனம்
ஊரெங்கும் சிந்தி செல்லும் தண்ணீர்
இரண்டாவது
கவலையை குறைத்துவிட்டது.
எங்கேயாவது அலைபேசி கோபுரங்களின்
கதிர்வீச்சுக்கு தப்பித்த பறவைகளும்,
ரசாயன உரங்களுக்கு தப்பித்த
சிறு பூச்சிகளும் நிச்சயம் இவற்றை உண்டு
சில காலம் தங்கள் ஆயுளை நீட்டித்துகொள்ளும்…
பாவம் என்னதான் இந்த உலகம்
நமக்கு மட்டும் தான்
என்று நம் மனித இனம் சர்வாதிகாரம் செலுத்தினாலும்
எப்படியோ தப்பி பிழைத்து கொள்கின்றன
அதிர்ஷ்டசாலி உயிரினங்கள்சில…
நாளை நம் தலைமுறை நம்மை காரி உமிழலாம்..
“எல்லா உயிரினங்களையும் ஒளி காட்சிகளில்
மட்டுமே
விட்டு சென்றுவீட்டீர்களே….
உங்கள் மனித நேயம் வாழ்க என்று….. "
இப்படிக்கு
மு.வெ.ரா…
திருநெல்வேலியிலிருந்து…
செப்டம்பர்-2012