கரையாத நினைவுகளுக்கு அஞ்சலி
பிறக்கும் போதே சரியாக அழவில்லையாம் அந்த குழந்தை பயந்தார்கள் சுற்றத்தார்.
பிறந்த பின் ஓவ்வொரு நாளும் அழுதுகொண்டே தான் இருந்தது …
கொடிது கொடிது இளமையில் வறுமை என்றால் ஒளவை, ,
அதனினும் கொடிது நோய் முற்றி அதை தீர்க்க விடாத வறுமை…
அழுதான் ஒவ்வொரு நாளும் அழுதான் அதைத்தவிர அவனால் எதையுமே செய்ய முடியவில்லை …
முயற்சிக்க அவன் தவறவில்லை பொறுத்து பார்த்த அவன் புறப்பட்டுவிட்டான்.
இப்பொழுது சந்தோசமாய் அவன் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுவிட்டான்…
இன்று அவனைத்தவிர
எல்லாரும் அழுதோம் அழுதோம் அழுகை மட்டுமே கொண்டு இருக்கிறோம்…..
இன்று காற்றில் கலந்து விட்ட என் கல்லூரி நண்பன் குற்றாலிங்கம் ஆத்மா சாந்தியடையட்டும் இனிமேலாவது அவன் குடுமபத்தில் மழிழ்ச்சி பிறக்கட்டும்…..
இல்லாததை நினைத்து தினமும் வருந்தி கொண்டிருக்கும் என் போன்ற சாதாரணன்களுக்கு எதுவுமே இல்லமால் போராடி முடியாமல் போய் சேர்ந்த இவன் போன்ற உயிர்களின் வாழ்க்கை ஒரு பாடம்…..
வாழ்கை மிகவும் அழகானது தான் ஆனால் நிபந்தனைகளுக்கு உட்பட்டது….
**
**
14-06-2011