November 14, 2012

அ...............க சில கவிதைகள் -3

அ……………க ஒரு கவிதை :- 7  ( நவம்பர்-2012 இரண்டாவது வாரம்.)

என்னை பற்றி ஒரு கவிதை சொல் என்றாள் !

நீ 

நோயுற்றால் 

மருந்துகள் தேடுகிறாய்

நீ

மருந்தாய் இருப்பதனாலே

நான் நோய்களை தான்

தேடுகிறேன்

நீ

மருந்தாய் இருக்கும் வரை

எனக்கு

மருத்துவம் தேவையில்லை

மரணமும் வரப்போவதில்லை…!


**
** அ……………க ஒரு கவிதை :- 8 ( நவம்பர்-2012 இரண்டாவது வாரம்.)

**
**

என்னை பற்றி ஒரு கவிதை சொல் என்றாள் !

என் கைபேசி 

இன்னொரு கையாய் மாறி போயிருந்தது

அன்று

எங்கிருக்கிறது

என்று தெரியாமல் இருக்கிறது

இன்று

உன்னிடம் பேச முடியாத  நாட்களில்

கைபேசி மட்டுமல்ல

எதுவுமே தேவைப்படுவதில்லை

எனக்கு

எதிர்பார்ப்பே இல்லாத வாழ்க்கை

அது

அந்த நாட்களில்

எதிர்பார்ப்பே

என் வாழக்கைதான் ( நீ )


**
** அ……………க ஒரு கவிதை :- 9 ( நவம்பர்-2012 இரண்டாவது வாரம்.)

**
**

**என்னை பற்றி ஒரு கவிதை சொல் என்றாள் **!

ஏதோ சில தருணங்களில் 

உன் தாயை

விமர்சித்து  இருக்கிறேன்

அமைதி காத்திருந்தாய்

உன்தந்தையை

விமர்சித்து இருக்கிறேன்

மௌனமாய் கடந்தாய்

பல தடவை

உன்னையும் விமர்சித்து கொண்டே இருப்பேன்

சலனமற்று புன்னகைத்தாய்

என்னை நானே

எப்பொழுதாவது விமர்சித்தால்

கூட

அழுத்தமாய் சொன்னாய்

அதற்கு உனக்கு

உரிமையில்லை என்று…!

**
**


இப்படிக்கு

மு.வெ.ரா…

திருநெல்வேலியிலிருந்து…****

powered by theVinesh