December 14, 2011

"தெரிந்தது கைமண்ணளவு"

ஷாலி இந்த காலத்து பொண்ணு பி.இ(சி.எஸ்.இ) பைனல் இயர். ஒரு கையில உள்ள போன்ல எஸ்.எம்.எஸ் பண்ணிகிட்டே இன்னொரு கையில லேப்டாப்ல மெயில் சாட்டிங் பண்ணிகிட்டே,அப்பப்ப வர்ற போனுக்கு காதுல போட்டிருக்கிற ஹெட்செட் மூலமா பதில் சொல்லிக்கிட்டிருக்கா.

அப்ப காப்பியோட அந்த ரூம்க்குள்ள வர்ற அவங்க அம்மா பாப்பா நீ காலேஜ் போன பிறகு எவ்வளோ போன் வருது போகுது.எனக்கு பேச தெரியுதா ?அணைக்க தெரியுதா செல்போனெல்லாம் நீ வச்சுக்கோ வீட்டில வச்சுட்டு போகதேனா கேட்க்கமாட்டிக்கிற, இத எப்படி யுஸ் பண்றது?.

கோபமான ஷாலி “அம்மா ரெண்டுநாளா உனக்கு நா சொல்லி கொடுத்தெல்லாம் வச்சு ஒரு புக்கே போடலாம். ஆனா உனக்கு புரியவே மாட்டிக்குது. இங்கவா அந்த போன் இப்படி குடு நொள்ளை அவ அம்மாக்கு கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சுட்டா இந்த பச்ச பட்டன் அமுக்கினா கால் அட்டென்ட் பண்ணும்,செவப்பு பட்டன் கால் கட் பண்ண. நாலாம் நம்பர் அமுக்கினா அப்பாக்கு கால் போகும், இரண்டு அமுக்கினா எனக்கு கால் வரும்,ஒன்னு அமுக்கினா அண்ணாவுக்கு கால் போகும்.இவ்வளவு தான் சரியா! புரிஞ்சுதா எங்க சொல்லு பாப்போம்ங்கிறா”…

ஷாலி அம்மா திக்கி திணறி சொல்றாங்க “நாலு அமுக்கினா கால் வரும் இரண்டு அமுக்கினா கட் ஆகும். பச்ச பட்டன அமுக்கினா அப்புறம் ஐயோ மனசில நிக்கவே மாட்டிக்குதுமா”…அப்படிங்கிறாங்க

டென்சன் ஆகுற ஷாலி என்னமா இது கூட ஞாபகம் வைக்க முடியலையே உனக்கு, வயசாயிட்டாலே இப்படித்தான் உங்க ஜென்ரேசன் பீப்பிள் லாம் ஏன் தான் இப்படி இருக்கீங்களோ?" அப்படின்னு சொல்லிக்கிட்டிருக்கும்போதே அவ அண்ணன்கிட்ட இருந்து கால் வருது அந்த கால அட்டென்ட் பண்ணி அம்மாகிட்ட குடுத்துட்டு இனி என்ன சொல்லிகுடுத்தாலும் உன்னால ஞாபகம் வச்சுக்க முடியாது உன் பையன் கிட்ட பேசு அப்படிங்கறா எரிச்சலா….

ஷாலி அம்மா போன கையில வாங்கி ஹலோ சொல்றாங்க எதிர் பக்கம் அவங்க பையன் அம்மா அந்த மளிகை சாமான் லிஸ்ட் தொலைச்சிட்டேன். என்னலாம் வாங்கனுமுனு ஒரு தடவை சொல்லுங்க நா எழுதிக்கிறேனு சொல்லவும், இந்த பக்கம் அவங்க அம்மா பரவாயில்லை தம்பி சொல்றேன் குறிச்சுக்கோனு ஆரம்பிக்கிறாங்க,“புளி கால் கிலோ, வத்தல் அரைகிலோ,மல்லி பொடி நூறு,அரிசி 25 கிலோ, தேங்காய் எண்ணெய் அரை லிட்டர்,நல்லெண்ணெய் -ஒரு லிட்டர்,உ.பருப்புஇரண்டு கிலோ,து.பருப்பு-இரண்டு கிலோ இப்படியே ஒரு 50பொருள் லிஸ்ட் படபடனு எதையும் பார்க்காமலே சொல்லிட்டு பார்த்து பத்திரமா வீட்டுக்கு வாடானு போன கட் பண்ணிட்டாங்க

ஷாலிக்கு அவங்க அம்மா போன்ல அவ அண்ணன் கிட்ட சொன்ன பொருள்ல பத்து பொருள் பேர் கூட ஞாபகம் வைக்க முடியில….

**
**

இப்படிக்கு
மு.வெங்கட்ராமன்

**திருநெல்வேலியிலிருந்து **

**காலம் :-ஆகஸ்டு நாலாவது **வாரம் 2011

powered by theVinesh