அ……………க ஒரு கவிதை :- 4 (செப்டம்பர்-2012 முதல் வாரம்.)
**
**
என்னை பற்றி ஒரு கவிதை சொல் என்றாள் !
முதல் நாள்
முதல் சந்திப்பு
உன் அலுவலக வாசலில்
உன்னை நான் பார்த்தபோது
உணர்ந்தேன்
நீ ஒரு காட்சி
கவிதை,
நீ நேரில் பேசிய
முதல் வார்த்தை
ஒரு
ஒலி கவிதை
ஒவ்வொரு நாளும்
உன்னை நினைத்தாலே பிறக்கும்
ஆயிரம் கற்பனைகள்
ஒவ்வொன்றும்
ஒரு கவிதை தொகுப்பு….!
அ……………க ஒரு கவிதை :- 5(செப்டம்பர்-2012 இரண்டாவது வாரம்.)
**
**
என்னை பற்றி ஒரு கவிதை சொல் என்றாள் !
குழந்தை பெற்றெடுக்க
தகுதியுள்ள குழந்தை
நீ!
என் குழந்தையை
பெற்றெடுக்க தகுதியுள்ள
குழந்தையும்
நீ தான்…!
அ……………க ஒரு கவிதை :- 6 (செப்டம்பர்-2012 மூன்றாவது வாரம்.)
**
**
என்னை பற்றி ஒரு கவிதை சொல் என்றாள் !
முதலிலேயே முடியாது என்றேன்
சொல்லு அம்மு!
என்றாள்,
ம்ஹூம் என்றேன்,
**சொல்லபோறியா இல்லையா குட்டி **
என்றாள்
மீண்டும் மறுத்தேன்,
என் செல்லம்ல சொல்லுமா
**தங்கம்ல **
ப்ளீஸ் புஜ்ஜிம்மா
**கட்டிப்புள்ள **
தொடர்ந்தன வார்த்தைகள்
தாமதத்திற்க்கு
பலன் கிடைத்தது
உன் கொஞ்சல்களை
சரியாய் அடுக்கி பார்த்தேன்
எனக்காக நீ படைத்த
புதுக்கவிதை பிறந்திருந்தது,
இப்படிக்கு
மு.வெ.ரா…
திருநெல்வேலியிலிருந்து…****