**"**தெய்வம்"
ஆஹா என்ன அழகு
எத்தனை அழகு
எங்கெங்கோ அலைந்து
எத்தனையோ கைமாறி
கடைசியில்
மோட்சம் பெற்றன !
மௌனத்திலேயே
மகிழ்விக்க தொடங்கின
உயிரில்லை என்றாலும்
நேசிக்க தொடங்கின
தன் அங்கங்கள் இழந்தும்
சிரிக்கின்றன
தன் சகாக்களின் மீதே
பொறாமை கொள்கின்றன
ஒன்றோடொன்று
போட்டி போடுகின்றன
மற்றொரு தொடுதலுக்காக
ஏங்குகின்றன
காத்திருக்கமுடியாமல்
தனிமை சோகத்தில்
தவிக்கின்றன இந்த
பொம்மைகள்
ஆம்
உறங்குகிறது குழந்தை (தெய்வம் ) !
இப்படிக்கு
மு.வெ.ரா…
திருநெல்வேலியிலிருந்து…
நவம்பர்**-2012**