August 30, 2012

அ...............க சில கவிதைகள் - 1

அ……………க ஒரு கவிதை :-1  (ஆகஸ்டு -2012  மூன்றாவது வாரம்.)

**
**

என்னை பற்றி ஒரு கவிதை சொல் என்றாள் !

யோசிக்காமல் சொன்னேன்


காதல் வந்தால் கவிதை தானாய் வரும் என்பார்கள்

கவிதையே காதலியாய் வந்திருக்கிறதே!

“இதுதான் காதல் கவிதையோ?”


அ……………க ஒரு கவிதை :-2  (ஆகஸ்டு -2012  நான்காவது வாரம் திங்கள்கிழமை )

என்னை பற்றி ஒரு கவிதை சொல் என்றாள் !

வார்த்தைகளுக்குள் தொடங்கியது போட்டி

வார்த்தை வெளிவரவில்லை


நான் நீ என்று

 போட்டி போட்ட வார்த்தைகள்

 திக்கி திணறின,

மௌனமாய் மனதிற்குள்ளேயே

 உன் பெயரை மட்டும் உச்சரித்தேன்………..


அ…………… ஒரு கவிதை :-3   (ஆகஸ்டு -2012  நான்காவது வாரம் புதன்கிழமை )

**
**

என்னை பற்றி ஒரு கவிதை சொல் என்றாள் !

வேகமெடுத்தன………

 என் சிந்தனைகள்

சிந்தனை எல்லாவற்றிலும்

 நீயே இருப்பதால்

கவிதை வரவில்லை

புன்னகையே வந்தது!!!


இப்படிக்கு

மு.வெ.ரா…

திருநெல்வேலியிலிருந்து…****

powered by theVinesh