எப்படி இருக்கீங்க? நம்ம வலைப்பூவில ஒவ்வொரு மாசமும் ஒரு போட்டி நடத்துறதா சொல்லியிருந்தேன்.இந்த நவம்பர் மாத போட்டி ஆரம்பிக்கறதுக்குள்ள,இந்த மாசமே முடிஞ்சுபோச்சு.அதனால இந்த வருஷம் தொடங்கி இனி ஒவ்வொரு வருஷமும் நவம்பர்-டிசம்பர் ரெண்டு மாசமும் சேர்த்து ஒரு போட்டி வைக்கலாம்னு நெனைச்சுருக்கேன்.
(போட்டி நடத்துவதற்க்கான காரணத்தை என் பழைய பதிவில் பார்த்து தெரிந்து கொள்ளவும்)போட்டி ஒண்ணுமில்ல>>>>>>>> இத வைக்கிறதுக்கு காரணம் சில விசயங்கள் நமக்கு தெரியாது! நம்மளால முடியுமா? முடியாதான்னு யோசிப்போம்,சில விசயங்கள் நம்ம முயற்சிக்கும் போது தான் வெளிப்படும்.என்னைக்கோ யாரோ நம்ம முதாதையர்கள்ல ஒருத்தர் சும்மா கிடந்த ரெண்டு கல்ல உரசி பார்க்கலேனா**(அதாங்க சிக்கி முக்கி கல்லு)** மனித இனத்தின் மிக முக்கியமான கண்டுபிடிப்பு நெருப்பு தான் வந்துருக்குமா? இல்ல அத தொடந்து உருவான வளர்ச்சிகள் தான் நடந்திருக்குமா?
நாம இருட்டுல முழ்கி மறைஞ்சுருப்போம்.ஏன் மனித வரலாறே மாற்றமாகியிருக்கும்.ஆக நம்ம செய்யுற முயற்சிகள் வெற்றியா? தோல்வியானு? பார்க்கிரத விட,அது ஒரு பெரிய மாற்றத்தோட துவக்கமா இருக்கலாம்னு தான் நான் நெனைக்குறேன்.அந்த தைரியத்துல தான் இந்த போட்டி “உங்க மனச பாதிச்ச ஒரு விசயத்த ஒரு குட்டி கதையா எழுதி அல்லது டைப் பண்ணி எனக்கு அனுப்புங்க” “கடைசி தேதி டிசம்பர் 25-2010அப்புறம் டிசம்பர் 31-2010ஆம் தேதி முடிவ அறிவிக்கிறோம்.
முதல் கதைக்கு பரிசு முதல் முன்று சிறந்த கதைகளில் இருந்து உங்கள் வாக்கெடுப்பின் படி தேர்ந்தடுக்கபடும் ஒரு கதையை குறும்படமாக எடுக்க போகிறேன்…
எல்லார்கிட்டயும் ஒரு கதை இருக்கு.நமக்குள்ளையும் ஒரு கலைஞன் ஒளிஞ்சுக்கிட்டுதான இருக்கான்.அவன கொஞ்சம் தட்டி எழுப்புவோம்."நிபந்தனை ஒண்ணுமில்ல" நாலு வரி கதையில் இருந்து ஒரு ரெண்டு பக்கம் வரைக்கும் **(குட்டி கதைப்பா)** எழுதலாம்.
கதைய அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்:- [email protected]
**கண்டிப்பா எல்லாரும் எழுதனும்னு நான் ஆசைப்படுறேன்.உங்கள் பங்கேற்பு தான் நீங்கள் எனக்கு தரும் பரிசு»»»» **
பரிசுக்காக காத்துருக்கிறேன் !!!!!!!!!!!!!
–
“விதைத்தவன் உறங்கலாம் விதைகள் உறங்குவதில்லை”...
அன்புடன் உங்கள்
மு.வெங்கட்ராமன்…-(உலகில்
அதிக மனிதர்களை சம்பாதிக்க விரும்பும் ஒருவன்)
திருநெல்வேலி…..
“கனவு காணுங்கள் நண்பர்களே !
உங்கள் ஒவ்வொரு கனவுகளும் நிச்சயம் ஒருநாள் மெய்ப்படும் " ….