2012

Nov 20

என் கவிதைகள்-3( பக்க குறிப்பு:- கவிதை மாதிரி)

**"**தெய்வம்" ஆஹா என்ன அழகு எத்தனை அழகு எங்கெங்கோ அலைந்து எத்தனையோ கைமாறி கடைசியில் மோட்சம் பெற்றன ! மௌனத்திலேயே மகிழ்விக்க தொடங்கின உயிரில்லை என்றாலும் நேசிக்க தொடங்கின தன் அங்கங்கள் இழந்தும் சிரிக்கின்றன தன் சகாக்களின் மீதே பொறாமை கொள்கின்றன ஒன்றோடொன்று போட்டி போடுகின்றன மற்றொரு தொடுதலுக்காக ஏங்குகின்றன காத்திருக்கமுடியாமல் தனிமை சோகத்தில் தவிக்கின்றன இந்த பொம்மைகள் ஆம் உறங்குகிறது …
Nov 14

அ...............க சில கவிதைகள் -3

அ……………க ஒரு கவிதை :- 7 ( நவம்பர்-2012 இரண்டாவது வாரம்.) என்னை பற்றி ஒரு கவிதை சொல் என்றாள் ! நீ நோயுற்றால் மருந்துகள் தேடுகிறாய் நீ மருந்தாய் இருப்பதனாலே நான் நோய்களை தான் தேடுகிறேன் நீ மருந்தாய் இருக்கும் வரை எனக்கு மருத்துவம் தேவையில்லை மரணமும் வரப்போவதில்லை…! ** ** அ……………க ஒரு கவிதை :- 8 ( நவம்பர்-2012 இரண்டாவது …

more

Sep 19

அ...............க சில கவிதைகள் - 2

அ……………க ஒரு கவிதை :- 4 (செப்டம்பர்-2012 முதல் வாரம்.) ** ** என்னை பற்றி ஒரு கவிதை சொல் என்றாள் ! முதல் நாள் முதல் சந்திப்பு உன் அலுவலக வாசலில் உன்னை நான் பார்த்தபோது உணர்ந்தேன் நீ ஒரு காட்சி கவிதை, நீ நேரில் பேசிய முதல் வார்த்தை ஒரு ஒலி கவிதை ஒவ்வொரு நாளும் உன்னை நினைத்தாலே பிறக்கும் ஆயிரம் கற்பனைகள் ஒவ்வொன்றும் ஒரு கவிதை தொகுப்பு….! …

more

Sep 3

என் கவிதைகள்-3( பக்க குறிப்பு:- கவிதை மாதிரி)

" முற்பகல் செய்யாவிடில் நிச்சயம் பிற்பகலில் விளையாது “ நம் முன்னோர்கள் காக்கைக்கு தினமும் சாதம் படைத்து உணவளித்தார்கள், நம் முன்னோர்கள் சிறு உயிரிகளுக்கும் மாக்கோலமிட்டு உணவளித்தார்கள், நம் முன்னோர்கள் சாலைகளில் தாகமாய் கடந்து செல்லும் கால்நடைகளுக்காக வீட்டு வாசலிலேயே தண்ணீர் வைத்தார்கள் இன்று நாம் ? இந்த கேள்வி நீண்டநாளாய் என் மனதை உறுத்திக்கொண்டே இருந்தது…. அப்பாடா ! இன்று …

more

Aug 30

அ...............க சில கவிதைகள் - 1

அ……………க ஒரு கவிதை :-1 (ஆகஸ்டு -2012 மூன்றாவது வாரம்.) ** ** என்னை பற்றி ஒரு கவிதை சொல் என்றாள் ! யோசிக்காமல் சொன்னேன் காதல் வந்தால் கவிதை தானாய் வரும் என்பார்கள் கவிதையே காதலியாய் வந்திருக்கிறதே! “இதுதான் காதல் கவிதையோ?” அ……………க ஒரு கவிதை :-2 (ஆகஸ்டு -2012 நான்காவது வாரம் திங்கள்கிழமை ) என்னை பற்றி ஒரு கவிதை சொல் …

more

Apr 22

" நானும் அவளும் "

அன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை. சென்னை கிண்டியில் ஒரு பேருந்து நிறுத்தம்.. இராத்திரி 10 மணிக்கு மேல இருக்கலாம்… இரவு பூலோக பிரமாண்டங்களின் பகல் பிம்பங்களை, கொஞ்சம் கொஞ்சமாக மறைக்க தொடங்கியிருந்தது. தெருவிளக்குகளோட மஞ்சள் வெளிச்சத்தில சில வாகனங்கள் அதிகபட்சமான ஹாரன் ஒலிய காற்றில உமிழ்ந்துட்டு எங்கள கடந்து போய்க்கிட்டிருந்தது. பக்கத்தில எங்கேயோ ஒரு தள்ளுவண்டிகடையில கொத்துபரோட்டா போடுற சத்தம் நல்லா …

more

Mar 22

"மூவாயிரம்மம்ம்ம்ம்"

டங்…….. டங்………. டங்னு ………..பெரிய சத்தத்தோடு ஒரு மூட்டை அந்த பச்சை பெயின்ட் அடிச்ச ஓட்டு வீட்டு மாடியில இருந்து ஒவ்வொரு படியா உருண்டு வர வர அந்த காம்பவுண்ட்ல இருக்கிற ஓவ்வொரு வீட்ல இருந்தும் மனுசாளுங்க வெளியில வர்றாங்க….. அந்த வீடு நூறு வருஷம் பழையது.அதோட கருங்கல்படிகள்ல உருண்டு வர்ற அந்த மூட்டையில இருந்து வெளியான சத்தம் சுத்தியுள்ள …

more

2011

Dec 24

"தமிழ் சினிமா 2011"

ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு பதிவு கதை கவிதைகள தாண்டி என்னுடைய எண்ணங்களை பிரதிபலிக்கிற சில விசயங்கள பகிர்ந்துக்கலாம்னு நெனைக்கிறேன்.கடந்த வருடம் சென்னையில இருந்ததால முதல் முறையா சென்னை சர்வேதேச திரைப்பட விழாவில கலந்துக்குற வாய்ப்பு கிடைச்சுது.அதுல பாடல்கள் இல்லாம சண்டைகள் இல்லாம பல்வேறு நாட்டோட பல மொழிகள்ல வந்திருந்த படங்கள சப் டைட்டில தாண்டி பல உணர்வுகள உள்வாங்கி பார்த்தது ஒரு புதிய அனுபவமா …

more

Dec 14

"தெரிந்தது கைமண்ணளவு"

ஷாலி இந்த காலத்து பொண்ணு பி.இ(சி.எஸ்.இ) பைனல் இயர். ஒரு கையில உள்ள போன்ல எஸ்.எம்.எஸ் பண்ணிகிட்டே இன்னொரு கையில லேப்டாப்ல மெயில் சாட்டிங் பண்ணிகிட்டே,அப்பப்ப வர்ற போனுக்கு காதுல போட்டிருக்கிற ஹெட்செட் மூலமா பதில் சொல்லிக்கிட்டிருக்கா. அப்ப காப்பியோட அந்த ரூம்க்குள்ள வர்ற அவங்க அம்மா பாப்பா நீ காலேஜ் போன பிறகு எவ்வளோ போன் வருது போகுது.எனக்கு பேச தெரியுதா ?அணைக்க தெரியுதா செல்போனெல்லாம் நீ வச்சுக்கோ …

more

Dec 7

"போராடுவோம் போராடுவோம்"

இன்னையோட மூணாவது தடவை இந்த வருஷத்தில ஸ்ட்ரைக் நடக்குது.பெட்ரோல் விலை உயர்வ மத்திய அரசு குறைக்க நடவடிக்கை எடுக்கணுமுன்னு சொல்லி மாநிலம் முழுக்க எல்லா கடைகளையும் தனியார் நிறுவனங்களையும் மூடச் சொல்லி ஊர்ல இருக்கிற எல்லா சங்கங்களும் அறிவிச்சிட்டாங்க. நெறைய பஸ்ஸூம் ஓடாததனால காலேஜ்,ஸ்கூல் போற பசங்களுக்கும் பிரச்சனை காலையில 6 மணியில தொடங்கி சாயங்காலம் 6 மணிக்கு முடியற இந்த ஒருநாள் பந்த்தால அரசாங்கம் …

more