வணக்கம் நண்பர்களே,
இரண்டு நாட்களுக்கு முன்பு, செப்டம்பர் 6ஆம் தேதி, என் பிறந்தநாள் அன்று மாலையில் இதை அறிமுகப்படுத்தலாம் என்று நினைத்திருந்தேன்…
அந்த நாளில் காவலர்களுக்கு ஒரு பாடல் வெளியிட்டது, வேறு சில பதிவுகள் என இந்தப் பதிவு கவனம் பெறாமல் போய்விடும் என்பதால், இரண்டு நாட்கள் கழித்து இன்று வெளியிடுகிறேன்….
ஆர்.ஜே., வி.ஜே., குறும்படம், விளம்பரப் பட இயக்கம், ஆவணப்பட இயக்கம், நிகழ்ச்சி தொகுப்பு, ஈவன்ட் மேனேஜ்மென்ட் என வேறு பல துறைகளில் பணியாற்றினாலும், மனதிற்கு மருந்து தருவது எப்போதுமே எழுத்துதான்…
நான் எழுதப் படிக்கக் கற்றுக்கொள்ளும் முதல் முதல் எழுதியது, பாளையங்கோட்டை செயின்ற் ஜோசப் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படிக்கும் போது, மூன்றாம் வகுப்பு ஆசிரியை கிருஷ்ணவேணி அவர்களுக்கு ஒரு கடிதம் — என் கையெழுத்து அழகாக இல்லை என்று கூறி, அவர்கள் அடித்ததில் மொழி வீங்கி, என் அம்மா தலைமை ஆசிரியரிடம் வந்து சண்டையிட்ட நாட்கள் இன்னும் ஞாபகம் இருக்கிறது. அதற்குப் பிறகு மிச் என்னிடம் பேசவும் இல்லை, அடிக்கவும் இல்லை. என் கையெழுத்தும் அழகாகவில்லை.
பின், ஐந்தாம் வகுப்பில் என்னுடன் படித்த முத்துப்பெருமாள் என்ற அமைதியான மாணவன். ஆனால், ஏனோ தெரியவில்லை, அவன் பார்ப்பதற்கு கொஞ்சம் வித்தியாசமாக இருப்பான். சுருள் முடி, கருத்த தேகம், மூக்குத்தி, கடுக்கன் எல்லாம் அணிந்திருப்பான். அவனைப் பார்த்து பாரதியாரின் “முப்பது கோடி முகமுடையாள்” பாடலை எடுத்து, அந்தக் கவிதையை அவனை கலாய்ப்பது போல் ரீமிக்ஸ் செய்து எழுதியதுதான் என் முதல் கவிதை.
பின், 1998ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆறாம் வகுப்பில், நான்காயிரம் மாணவர்களுக்கு மேல் படிக்கும் தூய சவேரியார் பள்ளியில் சேர்ந்த பிறகு தொடங்கப் படித்தது எழுத்து, இலக்கியம், வாசிப்பு எல்லாமே என்னுள் வளப்படத் தொடங்கியது.
இங்கே வேறு எந்தப் பள்ளிகளிலும் இல்லாத சிறப்பாக வருடா வருடம் கொண்டாடப்படும் கலைவார விழா. கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த விழாவில் போட்டியாளர்களாக பங்கேற்க வாய்ப்பு கிடைப்பதற்கு அவ்வளவு போட்டி இருக்கும். அவ்வளவு திறமைசாலிகள் ஒவ்வொரு வகுப்பிலும் குவிந்து இருப்பார்கள்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, அந்தக் கலை மாத விழாவில் என் மகன் வெ.க.வியன் பெயரில் ஏழு விருதுகள் மற்றும் ரொக்கப் பரிசு வழங்கி வருகிறேன். இந்த ஆண்டு மூன்றாவது ஆண்டாக விருது வழங்க இருக்கிறேன்.
இந்தக் கலைவார விழாவில்தான் எழுத்து, பேச்சு என்று ஒவ்வொன்று கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார்கள் எங்கள் ஆசிரியர்கள். அதோடு, எங்கள் சேசுச் பள்ளிகளில் உள்ள குருமார்கள் நடத்திய “மாணவர் கனல்” மாதப் பத்திரிகை என்கிறது எனக்கு பல விஷயங்களையும் கற்றுக்கொடுத்தது.
வாசித்து வாசித்து, சிறிய அளவில் பள்ளியில் நடந்த போட்டிகளில் எழுதப் பழகி, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது அவர்கள் நடத்திய நான்கு நாட்கள் எழுத்தாளர் பயிற்சிப் பாசறை நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது, அதில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. வாழ்க்கையில் முதல் முறையாக வீட்டை விட்டு வெளியில் சென்து, ஹாஸ்டல் வாழ்க்கையில் நான்கு நாட்கள் தங்கிய அனுபவம் என் வாழ்வின் மிக முக்கியமான நாட்கள்.
அங்கிருந்துதான் எழுத்தின் மீதான ஆர்வம் தொற்றிக்கொண்டது. நிறைய எழுதி எழுதி பார்த்து கிழித்துப் போட்டு, நிறைய எழுதி கிரிட்டிங் கார்டுகளாகவும், கடிதங்களாகவும் நண்பர்களுக்குள் பரிமாறிக்கொண்டது என, இப்படித் தொடர்ந்த எழுத்து ஆர்வம், 2006ஆம் ஆண்டு கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும் காலகட்டத்தில் முதன்முதலாகக் கட்டுரைகள் எழுதத் தொடங்கினேன். ஒரு சில கதைகளும் எழுதினேன்.
2004 முதல் 2006 வரை நிறைய காமெடி ஸ்கிரிப்ட் எழுதி, ஆடியோ ரெக்கார்டிங் செய்து, கம்ப்யூட்டர் வெப் கேமராவில் சில வீடியோ ரெக்கார்டிங் செய்து, நானே எடிட் செய்து என் சிஸ்டத்தில் சேர்த்து வைத்தேன்.
அந்தக் காலகட்டங்களில் விளம்பர ஸ்கிரிப்டுகள் எழுதி, ஆடியோ வாய்ஸ் கொடுத்து வந்தேன். பின், 2007இல் ஹலோ எஃக்.மில் ஸ்கிரிப்ட் எழுதும் திறன் இன்னும் கொஞ்சம் வளர்ந்தது.
2009இல் மக்கள் டிவி இல் சேர்ந்த பிறகு, எழுத வேண்டும் என்ற ஆர்வம் வந்து, பார்க்கும் எழுத்தாளர்களிடம் எல்லாம் எப்படி எழுத வேண்டும் என்று கேப்பேன். எல்லோரும் பொதுவாக “படியுங்கள்” என்பார்கள். அவ்வளவுதான்.
அப்படி படித்த பல புத்தகங்களில் ஒன்று சுஜாதாவின் “சிறுகதை எழுதுவது எப்படி”. அந்தப் புத்தகத்தில் அவர் எதையும் சொல்லிக் கொடுக்கவில்லை. ஆனால், அதில் பல்வேறு வகைமைக் கதைகள் இருந்தன. இதைப் படிக்கும் போது, என் வாழ்வின் அனுபவங்கள் கதையாக மலரத் தொடங்கியது. அப்படி நான் முதலில் எழுதிய கதைதான் “அப்பாச்சி”.
அதன் பிறகு தொடர்ந்து, 2009 முதல் confidencecornerblogspotcom என்கிற வலைப்பூ வழியாகப் கொஞ்சம் கொஞ்சமாக, அவ்வப்போது எழுதி வந்தேன்.
அந்தக் காலகட்டத்திலேயே கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட குறும்படங்கள், விளம்பரப் படங்கள், ஆவணப்படங்கள் பொதிக்கு tv இல் 40 episode script என்று பல தளங்களில் எழுதி, இயக்கி, வெளியிட்டு, பின் 2011இல் ஹலோ எஃப்.மில் சேர்ந்ததற்குப் பிறகு, அங்கே செய்த “ஹலோ மேகசின்” என்கிற ஆடியோ மேகசினுக்காகக் குறுங்கதைகள் எழுதத் தொடங்கினேன்.
அந்த இரண்டு ஆண்டுகள் எழுதியதில் முதல் 25 கதைகளைத் தொகுத்து, என் 25வது வயதில், 2013ல் என் முதல் புத்தகம் “நீங்களும் கதை எழுதலாம்” என்ற குறுங்கதைத் தொகுப்பை சென்னையில் எங்கள் சொந்த தே பதிப்பகம் மூலம் வெளியிட்டேன்.
பின், நெல்லை டைம்ஸ் நாளிதழில் எழுதிய கட்டுரைத் தொடரில் இருந்து சில கட்டுரைகளைத் தொகுத்து, நண்பரோடு இணைந்து தொடங்கிய வெற்றிடம் பதிப்பகம் மூலம், 2022ல் இரண்டாவது புத்தகம் “டவுன்லோட் மனசு” வெளியானது. அது அமேசான் கிண்டிலிலும் கிடைக்கிறது.
முதல் புத்தகத்துக்கும் இரண்டாவது புத்தகத்துக்கும் இடைப்பட்ட காலத்திலும் சரி, இரண்டாவது புத்தகம் வெளியானதற்குப் பிறகு எல்லாம் சரி, கிட்டத்தட்ட ஆறு புத்தகங்கள் வெளியிடும் அளவுக்கு எழுதி வைத்திருக்கிறேன்.
அந்தக் காலகட்டத்தில் நிறைய தினசரி பிரிண்ட் மற்றும் ஆன்லைன் பத்திரிகைகள், வார இதழ்களில் பல்வேறு தன்னம்பிக்கைக் கட்டுரைகள், உணவு சார்ந்த கட்டுரைகள், பயணக் கட்டுரைகள் என்று நிறைய எழுதினேன்.
இப்படியே சென்று கொண்டிருந்தாலும், 2023க்குப் பிறகு முகநூலில் அனுபவங்களை, பயணங்களை, சில நபர்களின் நினைவுகளை, கருத்துகளாக எழுதும்போது, ஒவ்வொரு கட்டுரைக்கும் நிறைய நண்பர்கள் நீண்ட கருத்துகளைப் பகிர்ந்து, பாராட்டுகளைத் தெரிவிக்கும்போது, ஏன் எழுதுவதை விட்டு விட்டு YouTube, ஆன்லைன் ரேடியோ என்று மட்டும் இருக்கிறேன் என்று தோன்றிக்கொண்டே இருந்தது.
எழுத்து என்பது என்னுடைய வாழ்க்கையில் வெறும் ஒரு திறமை மட்டுமல்ல. நான் யார் என்பதைப் புரிந்துகொள்வேன், என்னைச் சுற்றியிருப்பவர்களையும், என் உடைய அனுபவங்களையும் வேறு ஒரு கோணத்தில் பார்க்கவும் எழுத்து கற்றுக்கொடுத்திருக்கிறது. நான் சந்தித்த மனிதர்கள், கடந்து வந்த பாதைகள், பெற்ற வெற்றிகள், சந்தித்த தோல்விகள் என எல்லாவற்றையும் வார்த்தைகளாக மாற்றும்போது, அவை எனக்கே ஒர் பாடமாக மாறியிருக்கின்றன. அதனால்தான், எழுதத் தெரிந்தவர்கள் மட்டுமல்ல, ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்க்கையில் நடந்தவற்றை எழுதி பார்க்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அது உலகத்திற்காக எழுதப்பட வேண்டிய அவசியமில்லை; சில நேரங்களில் நம்மை நாமே புரிந்துகொள்வதற்காக எழுதுவதுகூட போதுமானது.
இடையில் சில மாதங்களுக்கு முன்பு, தம்பி வினேஷ் அயர்லாந்தில் இருக்கிறார். அவரிடம் சொல்லி, பிளாக்ச்பாட்டில் இருந்து இணையதளத்துக்கு மாற்றி தர உதவி கேட்டபோது, அவர் சம்மதித்து ஒரு இணையதளமாக உருவாக்கி முடிப்பதற்குள், சில நாட்களில் நிறைய பேர் வாசிக்கிறார்கள் என்ற தகவலைச் சொன்னார்.
யாரோடும் பகிராமலேயே நிறைய பேர் வாசிக்க ஆரம்பிக்கிறார்கள் எனத் தெரிந்ததும், ஆர்வம் மீண்டும் தொற்றிக்கொண்டது.
இதோ, www.mvrinfotainer.com இணையதளத்தைத் தொடங்கிவிட்டேன்.
தினமும் ஒரு பதிவு. குறைந்தபட்சம் வாரத்துக்கு மூன்று பதிவு என்ற அளவில், மீண்டும் என் அனுபவங்களையும், சினிமா கட்டுரைகளையும், தனிப்பட்ட நினைவுகளையும், சில கதைகளையும், நல்ல ஆளுமைகளின் உரையாடல்களையும் பதிவு செய்ய உள்ளேன்.
இந்த இணையதளத்திற்கும், வழக்கம்போல் என் ஒவ்வொரு முயற்சிகளுக்கும் நீங்கள் கொடுக்கும் அதே ஆதரவைத் தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இது வெறும் இணையதளமாக இல்லாமல், என் பல்வேறு சமூக வலைதளங்கள், வேறு சில மக்கள் தொடர்பு கருவிகள் எல்லாவற்றையும் இணைத்து ஒரே புள்ளியில் கொண்டு வரும் ஒரு பிளாட்ஃபார்மாக இருக்கப் போகிறது.
எதிர்காலத்தில் இது என் புத்தக விற்பனைத் தளமாகவும், இன்னும் பல பரிமாணங்களைக் காணப் போகிறது. அவை என்ன என்பதை வருடத்திற்கு ஒரு புதுமையாய், ஒவ்வொரு வருடம் பிறந்த நாளில் இனி அறிவித்து, வாழ்நாள் முழுவதும் கேமராவுக்கு முன்பு மட்டும் அல்ல, கேமராவுக்கு பின்னாலும் என் எழுத்து பணியைத் தொடர விரும்புகிறேன்.
டவுன்லோட் மனசு என்கிற என் இரண்டாவது புத்தகமே என பாதி சுயசரிதை போன்தான் எழுதியிருந்தேன்.
மகாத்மா காந்தி அவர்கள் சொன்ன போல், நாம் என்ன செய்கிறோம் என்பதற்கும், நாம் என்ன செய்ய முடியும் என்பதற்கும் உள்ள வித்தியாசம், உலகின் பெரும்பாலான பிரச்சனைகளைத் தீர்க்கப் போதுமானதாக இருக்கும். என்ற கருத்தின் அடிப்படையில் எப்போதும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு முயன்று கொண்டே இருக்கிறேன்.
காந்தி சொன்ன இன்னொரு முக்கியமான விஷயம், “My Life Is My Message”. தன் வாழ்க்கையே தான் விட்டுச் செல்லும் பாடம் என்று சொன்னார். அதை சத்திய சோதனை புத்தகமாக எழுதி மறைந்தார்.
அதேபோன்று, எல்லோரும் தங்களுடைய வாழ்க்கை அனுபவத்தை எழுத வேண்டும் என்று நான் எப்போதும் சொல்லுவேன்.
அதைத்தொடர்ந்து பல மேடைகளிலும் வலியுறுத்தி வருகிறேன். அதை அவ்வப்போது செய்து வந்த நான், இனிமேல் அதை சின்சியராகத் தொடர்ந்து செய்ய இந்தத் தளம் ஒரு அடித்தளமாக இருக்கப் போகிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள�ிறேன்.
இப்படி எழுதியது, எழுதிக் கொண்டிருப்பது, இனி எழுதப்போவது, அவற்றில் ஏதாவது ஒன்றை 2027 பொருநை நெல்லை புத்தகக் கண்காட்சிக்கு என் முதல் புத்தகமாகக் கொண்டு வரவும் முயற்சித்து வருகிறேன்…
மற்றவை அனை�்தையும் எல்லாம் வல்ல பேரியக்க மண்டலத்தின் கையில் ஒப்படைக்கிறேன்….
நன்றி…
அன்புடன்,