MVR Infotainer

கேரளாவின் கண்ணூரில் நேரில் பார்த்த சுகர் கிளைடர்

“கேரளாவின் கண்ணூரில் உள்ள விலங்குகள் காட்சியகத்திற்குள் நான் நுழைந்ததும்,முதலில் என் கவனத்தை ஈர்த்தது இந்த குட்டி Sugar Glider! சின்னதா பார்க்கவே அவ்வளவு அழகா இருந்தது உண்மையைச் சொன்னால், இப்படி ஒரு உயிரினம் இருக்கிறது என்பதையே நான் முதல் முறையாக இங்குதான் தெரிந்தேன்!”

ரெம்மட்டி சுகர் கிளைடர்கள் கையில்

வெளிநாடுகளில் இது போன்ற நிறைய விலங்குகளோடு பழகி இருக்கிறேன் ஆனால் இந்தியாவில் இப்படி ஒரு அனுபவம் கிடைக்கும் என்று நினைத்து கூட பார்த்ததில்லை.

கங்காரு,கோலா,வொம்பாட்,தாஸ்மேனியன் டெவில் மாதிரி தாயின் உடல் பையில் வைத்து பாலூட்டும் வகையான மார்சுபியல் விலங்கு தான் இந்த சுகர் கிளைடர். இதன் பூர்வீகம் ஆஸ்திரேலியா மற்றும் நியூ கினியா தீவுகள்.

பொதுவாக மரங்களில் தான் வாழுமாம். கால்களுக்கு இடையில் இருக்கும் மெல்லிய தோல் போன்ற அமைப்பை பயன்படுத்தி, ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரத்திற்கு காற்றில் சறுக்கிப் பறக்கக்கூடியது. அதனால் glider என்ற பெயரும் அதிக பழங்களை உண்பதால் இதற்கு Sugar Glider என்று பெயர் வந்திருக்கிறது.

இது பகல் நேரத்தில் அதிகமாக சுறுசுறுப்பாக இருக்காது. இரவில்தான் ரொம்ப active-ஆ இருக்குமாம்.இதன் கர்ப்பகாலம் வெறும் 15 முதல் 17 நாட்கள்தான்! குட்டி பிறக்கும்போது முழுமையாக வளர்ந்திருக்காது. பிறந்த உடனேயே தாயின் வயிற்றில் இருக்கும் pouch-க்குள் சென்று, அங்கேயே பாலைப் குடித்துக்கொண்டு வளர ஆரம்பிக்குமாம்.சுமார் 2 மாதங்கள் pouch-க்குள் வளர்ந்த பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்து உலகத்தைப் பார்க்க ஆரம்பிக்குமாம்.அதன்பிறகு படிப்படியாக தானாக உணவு சாப்பிடவும், சுற்றுச்சூழலை அறிந்துகொள்ளவும் கற்றுக்கொள்கிறது என்றும் உடன் கைடு விளக்கினார்.

சுகர் கிளைடர் கையின் பின்னால் பறக்கும் பொழுது
சுகர் கிளைடர் கைத்தொப்பில் அமர்ந்திருக்கும் பொழுது
சுகர் கிளைடர் கையைக் காண்பிக்கும் பொழுது

கையில் வைத்து பார்த்த அந்நிமிடங்கள் உண்மையிலேயே ஒரு வித்தியாசமான அனுபவம். கையில் வைத்து நீட்டினால் இன்னொருவர் கை நீட்டும் போது நம் கையில் இருந்து அவர் கைக்கு தாவுகிறது.

நாம் அன்றாட வாழ்க்கையில் பார்க்காத, கேள்விப்படாத பல உயிரினங்களை நேரில் பார்க்கும்போது, இயற்கை எவ்வளவோ வித்தியாசமான படைப்புகளை உருவாக்கியிருக்கிறது என்பதை நினைத்தால் வியப்பு தான்…

அன்புடன்,
மு.வெ.ரா
பாளையங்கோட்டையிலிருந்து
10-09-2026
காலை 2 மணிக்கு எழுதியது.