MVR Infotainer

மதன்

வணக்கம் நண்பர்களே,

மதன்

ஹாய் மதன், மதன் ஜோக்ஸ், வந்தார்கள் வென்றார்கள் அவங்க எழுதின சில புத்தகங்கள் முதல் ரெண்டும் கொஞ்சம் கொஞ்சம் வந்தார்கள் வென்றார்கள் முழுசா இரண்டு முறை படிச்சிருக்கேன். அப்படி ஒரு writing timetravel பண்ணின மாதிரி இருக்கும்.

பல வருஷங்களுக்கு முன்னாடி ஒருமுறை நேரில் சந்தித்து இருக்கிறேன். இப்பொழுது நண்பர் ஒருவர் கேட்டுக் கொண்டதற்கு அவருடைய அனிமேஷன் ப்ராஜெக்ட் சம்பந்தமாக சில inputs எடுத்துக் கொள்வதற்காக கிட்டத்தட்ட ஒரு மாதம் மேல் நாங்கள் தொடர்பு கொள்ளும் போதெல்லாம் அவருடைய உடல்நிலை சரியில்லாமல் இருந்தது கடைசியில் இத்தனை முறை தொடர்பு கொள்கிறீர்கள் பரவாயில்லை வந்து விடுங்கள் என்று சொல்லி கடந்த ஞாயிறு அன்று அவரை நேரில் அவருடைய வீட்டில் சந்தித்தோம்.

நான்கு மணி நேரம் சொல்லி இருந்தார் மூன்றரை மணிக்கு அவர் இருக்கும் அப்பார்ட்மெண்டுக்கு அருகில் சென்று விட்டோம் செக்யூரிட்டியிடம் கேட்டால் மூன்றாவது மாதிரி என்று சொல்லிவிட்டார் ஆனால் அவர் இருப்பது நான்காவது மாடியில். மூன்றாவது மாடியில் எந்த வீட்டிலும் பெயர் இல்லாத போது ஒரு வீட்டில் கதையில் ஏதோ ஓவியம் போல் இருந்தது அதுதான் அவர்களிடம் சொன்னார் நிச்சயம் இருக்காது என்று சொல்லி நாங்க ஆறு மாடி வீட்டிற்கு நுழைந்ததும் அவருடைய மகள்தான் கதவை திறந்தார்கள் சார் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார் என்று சொன்னார்.

நாங்கள் ஏற்கனவே அப்பாயின்மென்ட் வாங்கி இருந்ததால் உடனே வந்து உட்கார்ந்து பேச தொடங்கினார்கள் இரண்டு மணி நேரம் போனதே தெரியவில்லை அவ்வளவு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்கள். மதன் சார் ராவ் சார் இவர்களைப் பற்றி சில மூத்த ஊடகவியலாளர்கள் கூறிய கருத்துக்களை கேட்டுள்ளேன்.

அவருடைய நேரடியாக பழகும் போது அதை உணர முடிந்தது அவ்வளவு அனுபவம் எவ்வளவோ பெரிய பெரிய ஆளுமைகளோடு பழகி இருந்தார். ஆனால் எங்களின் சின்ன சின்ன விஷயங்களை கூட அங்கீகரித்து பேசினார். தான் எப்படி கார்டூனிஸ்ட் ஆக ஆனேன் என்று அவர் சொன்னது inspiring ஆக இருந்தது.

தமிழகத்தில் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிலேயே கார்ட்டூனிஸ்ட் இருப்பது கொஞ்சம் வருத்தம் தான் என்று பகிர்ந்து கொண்டார்கள். மற்ற ஓவியர்கள் போல் கலைநயம் மட்டும் போதாது கார்ட்டூனிஸ்டுகளுக்கு அரசியல் சமூக சூழல் இன்னும் அதிகமாக தெரிந்திருக்க வேண்டிய அவசியம் உள்ளது.

விகடன் மாணவர் பத்திரிக்கையாளர் திட்டத்தை அவர்கள் தான் முதன் முதலில் கொண்டு வந்தார்கள் என்று சொன்னபோது வியப்பாக இருந்தது எத்தனை எத்தனை ஆளுமைகள் அதன் மூலமாக உருவாகி உள்ளார்கள். ஒரு கார்ட்டூனிஸ்ட் அந்த பத்திரிக்கையில் எடிட்டராக மாறியது எழுத்துத் துறையிலும் சாதித்தது எப்படி என்பதை பற்றிய அவர் சொன்ன போது மகிழ்ச்சியாக இருந்தது.

ஒரு சில வாரங்கள் இஸ்லாமிய மன்னர்களை பற்றி எழுதப் போகிறேன் என்று அனுமதி கேட்ட போது ஏன் ஒரு சில வாரங்கள் ஒட்டுமொத்த இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை பற்றியே முழு படைப்பாக கொடுங்கள் என்று சொல்லி விலை மதிப்பான 40 புத்தகங்களை வாங்க அனுமதி கொடுத்து அதன் மூலம் வந்தார்கள் வந்தார்கள் என்ற ஒரு சுவாரசிய வரலாற்று புத்தகத்தை நமக்கு கிடைக்க செய்த விகடன் குழுமத்திற்கு நிச்சயம் நன்றி சொல்ல வேண்டும்.

‘I came; I saw; I conquered’ என்கிற Julius Caesar இன் வரிகளில் இருந்து வந்தார்கள் வென்றார்கள் என்ற தலைப்பை எடுத்ததாக அவர் சொன்ன போது எவ்வளவு ஒரு சக்தி வாய்ந்த தலைப்பு என்பதை உணர முடிந்தது.

மேலும் தான் சிறிய வயதில் கோயில் சிற்பங்களை பார்த்து வரைந்து வரைந்து பழகி அதிலிருந்து தான் கார்ட்டூனிஸ்டாக மாறினேன் என்று சொன்னது திருநெல்வேலி கிருஷ்ணாபுரம் சிலைகளைப் பற்றி சிலாகித்து சொன்னது கார்ட்டூன் என்பது வெறும் கேலிச்சித்திரம் அல்ல அது ஒரு வரலாற்று அரசியல் அடையாளம் என்று கூறினார்.

சுஜாதாவுடன் இருந்த அனுபவங்களை பற்றி கூறினார் நான் நினைப்பது போல் இன்று சுஜாதாவால் சினிமாவில் கோடிகளை சம்பாதித்த பலர் அவருடைய எழுத்துக்களுக்கு ஒன்னும் அவ்வளவு பெரிய கோடிகளை கொடுத்து விடவில்லை என்பதை அறிந்த போது வருத்தமாக இருந்தது.

மேலும் தி.ஜானகிராமன் அவர்களின் கதைகளை படியுங்கள் என்று வலியுறுத்தி சொன்னார். அவர் தஞ்சை பின்னணியிலிருந்து வந்ததனால் மட்டுமல்ல அவருடைய கதையில் இருக்கக்கூடிய உயிரோட்டம் உங்களுக்கு பல அனுபவங்களை தரும் என்று சொன்னார். அதோடு அவருடைய பால்யம் தஞ்சையில் இருந்து சென்னை திருவல்லிக்கேணிக்கு வந்ததற்கு பிறகு திருவல்லிக்கேணியில் அந்த காலம் எப்படி இருந்தது என்பதை பற்றி குறிப்பிட்டு சொன்னார்.

ஒரு கைப்பிடி சீனி கேட்டால் கூட அங்கே கடையில் கொடுப்பார்கள் எந்த பொருளும் எவ்வளவு ரூபாய்க்கும் கொடுப்பார்கள் மிகக் குறைந்த காசை வைத்து அந்த ஊரில் ஒரு மாதத்தை ஓட்டி விடலாம் என்று சொன்னார் அதனால்தான் திருவல்லிக்கேணி பல சேவல் பண்ணைகளின் கூடாரமாகவும் சென்னைக்கு வேலை தேடி வாய்ப்பு தேடி வருபவர்களுக்கான வேடந்தாங்கல் ஆகவும் தொடக்க இடமாகவும் இருந்திருக்கிறது என்பதை உணர முடிந்தது.

நிறைய படியுங்கள் படிக்க படிக்க தானாக உங்களுக்கான கதவுகள் திறக்கும் என்றும் தன்னுடைய வீட்டில் இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை சேகரித்து வைத்துள்ளதையும் காட்டினார்கள். பல வருடங்களுக்கு முன்பு உலகத் தமிழர்கள் மதிக்கும் சதியால் மறைந்து போன மாபெரும் வீரத்தமிழ் தலைவரை பற்றி அவரை சந்தித்து பேசிக்கொண்ட அனுபவத்தை விரிவாக சொன்னபோது மெய் சிலிர்த்தது.

உண்மையில் அவர் மிகப்பெரிய ஆளுமை தான் அவருடைய தொலைநோக்கு சிந்தனை மற்றும் ஆழ்ந்த அரசியல் அறிவு சமூகப் பார்வை இதெல்லாம் ஒரு தலைவனுக்கானது அதனால் தான் அத்தனை நாடுகளை எதிர்த்து தனி ஒருவராக வெற்றி கொள்ள முடிந்தது என்பதை பற்றி எடுத்துச் சொன்னார்கள்.

நான் மக்கள் டிவியில் பணியாற்றும்போது பல்வேறு பேட்டிகளுக்காக பல ஆளுமைகளை சந்திக்கும் போது பல விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும். அதற்குப் பிறகு ஹலோ வந்ததற்கு பிறகு நேரத்திற்காக மட்டுமே பேட்டி எடுத்து முடிக்க வேண்டிய சூழல் இருந்தது இப்பொழுது மீண்டும் பல்வேறு பணிகள் காரணமாக பல ஆளுமைகளை சந்திக்கும் போது அவர்களுடைய வாழ்க்கை அனுபவங்கள் மூலம் பல வழிகாட்டுதல்கள் கிடைக்கிறது இது நிச்சயம் பெரிய விஷயம் தான்.

நான் மக்கள் டிவியில் பணியாற்றும்போது 2009 ஆம் ஆண்டில் புதிதாக பொறுப்பேற்ற சிஇஓவிடம் நான்கைந்து கிரியேட்டிவான கான்செப்ட் களை சொல்லி அவர் வியந்து போய் பொது மீட்டிங் இல் சௌமியா அன்புமணி அவர்கள் இருக்கும்போது பாராட்டி என்னை ஊக்கப்படுத்தினார் ஆனால் அதே தொலைக்காட்சியில் முக்கிய பணியில் இருந்த ஒரு நபர் அவன் இப்பொழுது டிரெய்னி தான் என்று சொல்லி மட்டம் தட்ட அத்தோடு அந்த புதிய சிஇஓ அதற்குப் பிறகு அந்த நேரத்தில் என்னிடம் எதுவும் பேசவில்லை என்னுடைய கான்செப்ட் வெளிவரவில்லை.

ஆனால் அதே கான்செப்ட் பின்னர் பல தொலைக்காட்சிகளில் அங்கிருந்து வெளியேறிய சிலராலே வந்தது என்பது நம்முடைய சிந்தனைக்கு கிடைத்த அங்கீகாரமாய் நினைக்கிறேன் உலகிற்கு அது நம்முடைய சிந்தனை என்று தெரியாமல் இருக்கலாம் நமக்கு தெரியும் அல்லவா?

இந்த நேரத்தில் ஏன் இதை சொல்கின்றேன் என்றால் மதன் சார் அவர்கள் நிறைய பேரை உருவாக்கியுள்ளார்கள் ஜூனியர் என்று பாராமல் புதிதாக வந்தவர் என்று நினைக்காமல் பலரையும் ஊக்கப்படுத்தி வழிகாட்டி என்று பல துறைகளில் பல நிலைகளில் உயர்த்தி இருக்க ஒரு அடித்தளமாக இருந்துள்ளார் அவரைப் போன்ற ஒரு நபர் எனக்கும் அந்த நேரத்தில் கிடைத்திருந்தால் இன்னும் பெரிய உயரத்திற்கு சென்றிருக்கலாமோ என்று அவருடைய இரண்டு மணி நேரம் உரையாடல் முடிவில் எனக்கு தோன்றியது.

ஆனால் அதற்கு நான் வருந்தவில்லை என் அளவில் 17 வயதில் நான் ஊடகத்தில் நுழைந்ததிலிருந்து இப்பொழுது 36 வயது இந்த 19 வருடங்களில் ஊடகத்திற்கு சம்பந்தமில்லாத ஆர்வம் மட்டுமே உள்ள 50க்கும் மேற்பட்டோரை இன்று பல்வேறு துறைகளில் பல இடங்களில் உயரங்களை அடைவதற்கு நான் ஒரு உந்து சக்தியாகவும் சில பேருக்கு ஏணியாகவும் சில பேருக்கு வழிகாட்டியாகவும் சில பேருக்கு காட்பாதராகவும் இருந்திருக்கிறேன் என்பது என் வாழ்நாள் நிறைவு.

இத்தோடு முடியப்போவதில்லை இன்னும் உலகில் வாழப் போகிற பல ஆண்டுகள் இன்னும் பல நூறு பல ஆயிரம் பேரை உருவாக்காமல் ஓயப் போவதில்லை அவ்வளவு தூரம் இதுபோன்று பலருக்கும் வழிகாட்டு தோன்றியது நமக்கு பல இடங்களில் வழிகாட்ட மறந்த நபர்களினால் ஏற்பட்ட வலிதவற வேறு எதுவும் இல்லை…

ஒரு நல்ல உரையாடல் என்ன செய்யும் அடுத்த ஒரு மாதத்திற்கு உத்வேகத்தோடு இயங்கச் செய்யும் இன்னும் நிறைய ஆளுமைகளை சந்திக்க வேண்டும்….

பயணங்கள் முடிவதில்லை

அன்புடன்
M.V.R Infotainer